ARTICLE AD BOX

‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆக்ஷனும் எமோஷனும் கலந்த திரைக்கதையுடன் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், இதனை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 1-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’, அதே நாளில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது. இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.