இந்தியாவை விட நாங்கள் பலவீனமாகதான் இருக்கிறோம்… முன்னாள் பாக் வீரர் கருத்து!

2 days ago
ARTICLE AD BOX

இந்தியாவை விட நாங்கள் பலவீனமாகதான் இருக்கிறோம்… முன்னாள் பாக் வீரர் கருத்து!

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்தியா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய சிக்கல் எழும். இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி கொஞ்சம் பலவீனமாகதான் உள்ளது. இந்தியாவின் பலமே அதன் நடுவரிசை மற்றும் கீழவரிசை பேட்டிங்தான். அவர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தார்கள். அந்த மாதிரி வீரர்கள் பாகிஸ்தானிடம் இல்லை” எனக் கூறியுள்ளார். 
Read Entire Article