ARTICLE AD BOX
ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பான் இந்தியா படமாக உருவான எம்புரான் வரும் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படக்குழு புரமோசன் பணியில் உள்ளது. அதன்படி, நேற்று ஐதராபாத்தில் இதன் புரமோசன் பணி நடந்தது. இதில், பேசிய மோகன்லால், இந்தியாவிலேயே தெலுங்குதான் சிறந்த சினிமாத்துறை என்று கூறினார்.
அவர் கூறுகையில், , "முன்பெல்லாம் என்னுடைய மலையாளப் படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும். ஆனால், இப்போது நேரடியாக தெலுங்கில் வெளியிடுகிறோம். லூசிபரை இந்திய அளவில் வெளியிட முடியவில்லை, ஆனால் எல்2: எம்புரான் மூலம் அதைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவர்கள். இந்தியாவிலேயே தெலுங்குதான் சிறந்த சினிமாத்துறை" என்றார்