ARTICLE AD BOX
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவிற்கு மரியாதை கொடுக்கின்றது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அமெரிக்க குடி மக்களாக இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்கா குடியுரிமை வழங்காது என்று அந்நாட்டு புதிய ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து சட்டபூர்வமாக முறைப்படி இந்திய அகதிகள் வெளியேற்றப்பட்டால் அவர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு புதுவிதமான அரசியலை முன்னெடுத்துள்ளார். அதோடு அவர் பதவியேற்ற ஒரே நாளில் பல நிர்வாக உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். மேலும் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளது. டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறது என்று முதல் நாளிலே தெரிந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் முதல் முதலாக சந்தித்த மற்றொரு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தான். எனவே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு இந்தியா, அமெரிக்காவின் உறவு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.