இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் – தமிழ்நாட்டோட இடம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

3 hours ago
ARTICLE AD BOX

இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இத்தகைய மிகப்பெரிய பொருளாதரத்திற்கு உதவுவது இந்தியாவின் சில முக்கிய மாநிலங்கள் தான். இந்த வளர்ந்த மாநிலங்களில் இருந்து வரும் வருவாயை வைத்து தான், வளர்ச்சி தேவைப்படும் மாநிலங்கள் மீது இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், தமிழ்நாடு இந்திய அரசுக்கு வருவாயை கொட்டி கொடுக்கும் ஒரு வளர்ச்சியடைந்த பணக்கார மாநிலம் தான்! தமிழ்நாட்டின் நிலை என்ன? இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள் என்னென்ன என்று இங்கே பார்ப்போம்!

1. மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா இந்தியாவின் நம்பர் 1 பணக்கார மாநிலமாகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14-15% பங்களிக்கிறது, அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ. 42.67 லட்ச கோடியை மகாராஷ்டிரா இந்திய அரசுக்கு தருகிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்கள் மும்பை மற்றும் புனேவில் இயங்கி வரும் முக்கிய தொழில்துறை மையங்கள், ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள், கரும்பு, பருத்தி மற்றும் மாம்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றின் விவசாயம், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், மும்பையின் ஈர்ப்புகள் அடங்கிய சுற்றுலா, பாலிவுட் திரைப்படங்கள் ஆகும்.

2. தமிழ்நாடு

இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாக நம் தமிழகம் திகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.31.55 லட்ச கோடியை இந்திய அரசுக்கு வருவாயாக வழங்கி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9-10% பங்களிக்கிறது. தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது ஆட்டோமொபைல்கள், ஜவுளி மற்றும் மின்னணுவியல், ஐடி மற்றும் மென்பொருள் சேவைகள், அரிசி, கரும்பு, வாழைப்பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விவசாயம், மீன்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் திரைப்படத்துறை ஆகும்.

3. கர்நாடகா

கர்நாடகா இந்தியாவின் மூன்றாவது பணக்கார மாநிலமாகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8-9% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, மின்னணுவியல் மற்றும் கனரக இயந்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, காபி, மசாலா மற்றும் பட்டு ஆகியவற்றின் விவசாயம், ஹம்பி மற்றும் மைசூர் போன்ற பாரம்பரிய தளங்கள் மற்றும் வனவிலங்கு இருப்புக்களிடமிருந்து கிடைக்கும் சுற்றுலா வருமானம், இரும்பு தாது மற்றும் தங்க சுரங்கம் ஆகியவை அடங்கும். கர்நாடகா ஆண்டு தோறும் ரூ. 28.09 லட்ச கோடியை வருவாயாக ஈட்டுகிறது.

4. குஜராத்

குஜராத் இந்தியாவின் நான்காவது பணக்கார மாநிலமாகும், ரூ.27.9 லட்ச கோடியை இந்திய அரசுக்கு வருவாயாக வழங்கி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் தொழில்துறை உற்பத்தி, பெரிய துறைமுகங்கள் மற்றும் வணிக மையங்களின் வர்த்தகம், பருத்தி, நிலக்கடலை மற்றும் புகையிலை அகியவற்றின் விவசாயம், வைர மெருகூட்டல் மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும்.

5. உத்தரப்பிரதேசம்

இந்தியாவின் ஐந்தாவது பணக்கார மாநிலமான உத்தரபிரதேசம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது, இதன் ஆண்டு வருவாய் ரூ.24.99 கோடி ஆகும். இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் கரும்பு, கோதுமை மற்றும் அரிசி விவசாயம், தோல், ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் உற்பத்தி, தாஜ்மஹால், வாரணாசி மற்றும் அயோத்தி சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சேவைகள், ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மத சுற்றுலாவாலும் மாநிலம் பயனடைகிறது.

6. மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் இந்தியாவின் ஆறாவது பணக்கார மாநிலமாகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7% பங்களிக்கிறது. இதன் ஆண்டு வருவாய் ரூ.18.8 லட்ச கோடி ஆகும். இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் அரிசி, சணல், தேயிலை மற்றும் மீன்வளம், ஜவுளி, ரசாயனங்கள் மற்றும் எஃகு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள், டார்ஜிலிங், சுந்தரவனக்காடுகள் மற்றும் கொல்கத்தாவின் கலாச்சார அடையாளங்கள் அகியவற்றின் சுற்றுலா, ஆகியவை அடங்கும். மாநிலம் வலுவான தேயிலை தொழில் மற்றும் சணல் உற்பத்தியையும் கொண்டுள்ளது, இது அதன் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

7. ராஜஸ்தான்

ராஜஸ்தான் ஆண்டுக்கு ரூ.17.8 லட்ச கோடி வருவாயாக வழங்கி இந்தியாவின் ஏழாவது பணக்கார மாநிலமாக உள்ளது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6-7% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் சுண்ணாம்பு, பளிங்கு மற்றும் ஜிப்சம் சுரங்கம், அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் ஜெய்சால்மர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற சுற்றுலாத் தலங்கள், தினை, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் விவசாயம், ஜவுளி, நகைகள் மற்றும் மட்பாண்டங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் சிமென்ட் உற்பத்தி ஆகியவை அடங்கும்.

8. தெலுங்கானா

இந்தியாவின் எட்டாவது பணக்கார மாநிலமான தெலுங்கானா, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5-6% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், அரிசி, பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றின் விவசாயம், ஜவுளி, மின்னணுவியல் மற்றும் உணவு பதப்படுத்துதல், சார்மினார், கோல்கொண்டா கோட்டை மற்றும் ராமோஜி திரைப்பட நகரம் ஆகியவை அடங்கும். அதே போல இந்த மாநிலம் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிலிருந்தும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகிறது. தெலுங்கானா ஆண்டுக்கு ரூ.16.5 லட்ச கோடியை வருவாயாக வழங்குகிறது.

9. ஆந்திரப்பிரதேசம்

இந்தியாவின் ஒன்பதாவது பணக்கார மாநிலமான ஆந்திரப் பிரதேசம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5-6% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் விவசாயம், மீன்பிடித்தல், ஜவுளி, மருந்துகள் மற்றும் ஆட்டோமொபைல்கள் உற்பத்தி, சுற்றுலா மற்றும் துறைமுகங்கள் மற்றும் வர்த்தகம் ஆகியவை அடங்கும். ஆந்திரா ரூ.15.89 லட்ச கோடி வருவாய் வழங்குகிறது.

10. மத்தியப்பிரதேசம்

மத்தியப் பிரதேசம் இந்தியாவின் பத்தாவது பணக்கார மாநிலமாகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4-5% பங்களிக்கிறது. இதன் முக்கிய வருமான ஆதாரங்களில் விவசாயம், சுரங்கம், உற்பத்தி, வனவியல் மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும். மின் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிலிருந்தும் மாநிலம் பயனடைகிறது.

Read Entire Article