ARTICLE AD BOX
இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுக் கொண்டார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு ஐசிசி சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை பெற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க: இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றார். ஐசிசியின் விருதுகளை பும்ரா பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை ஐசிசி அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Jasprit Bumrah receives his #ICCAwards and Team Of The Year caps for a stellar 2024
ICC Men’s Cricketer Of The Year ️
ICC Men’s Test Cricketer Of The Year ️
ICC Men’s Test Team Of The Year
ICC Men’s T20I Team Of The Year pic.twitter.com/WW5tz8hSFy
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின்போது, ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.