ARTICLE AD BOX

இந்தியன்-3 பட ரிலீஸ் விவகாரம் குறித்துக் காண்போம்..
இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன்-3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும்.
ஆனால், இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என கூறியுள்ளார் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்த தோல்விகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனம், தங்களுக்கு இந்தியன்-3 படமே வேண்டாம் என சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இந்தியன்-3 படம் திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் ஷங்கருக்கான சம்பள பிரச்சினையை பேசி முடித்து, அதன்பின் படப்பிடிப்பு நடத்தி அதை ரிலீஸ் செய்வதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது
இதனால் இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட சான்ஸ் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், படக்குழு இதுபற்றி எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்தியன்-3 படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வாலும் நடித்துள்ளார்.
இந்தியன்-2 புரமோஷனின் போதே தனக்கு 2-ம் பாகத்தை விட 3-ம் பாகம் தான் மிகவும் பிடித்திருந்தது என கமல் சொல்லி இருந்தார். தற்போது அவருக்கு பிடித்த அந்த 3-ம் பாகம் ரிலீசாவதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில், படத்தில் ரூ.20 கோடியில் அந்த ஒரு பாடல் அவ்வளவு அவசியமா? ஒரு பாடல் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்யவே முடியாதா? என ரசிகர்கள் கேட்பது வைரலாகி வருகிறது.

The post இந்தியன்-3 படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி வைரல்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.