ARTICLE AD BOX
இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்கு செலவிட இயலாத சூழலில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், மொத்த மக்கள்தொகையில் 30 கோடி பேர் மட்டுமே அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்கு தயக்கத்துடன் செலவிடுகின்றனர்.
140 கோடி மக்கள்தொகையில் 10 சதவிகிதமான வெறும் 14 கோடி பேர் மட்டுமே சந்தையில் தொடர்ந்து பங்களிக்கின்றனர். இந்த 10 சதவிகித இந்தியர்கள்தான், தற்போதைய தேசிய வருமானத்தில் 57.7 சதவிகிதத்தைக் கொண்டிருக்கின்றனர். இது 1990-ல் 34 சதவிகிதமாக இருந்தது.
இதையும் படிக்க: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!
இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனிலிருந்து, ஏழைகள் வாங்கும் திறன் (சந்தையில் பங்களிப்பு) குறைந்து வரும்வேளையில், பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருவது தெளிவாகிறது. இருப்பினும், புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.