ARTICLE AD BOX
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று வம்சாவளி குறித்து பாஜக அடிக்கடி கூறும் கருத்துகளுக்கு பதிலளித்து உரையாற்றியபோது, சுமன் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தில் நேற்று பங்கேற்ற அவர், ”இந்திய முஸ்லிம்கள், பாபரை தங்கள் இலட்சியமாகக் கருதுவதில்லை. ஆனால், பாபரை இந்தியாவிற்கு அழைத்து வந்தவர் யார்? இப்ராஹிம் லோடியைத் தோற்கடிக்க அவரை அழைத்தவர் ராணா சங்காதான்.
முஸ்லிம்கள் பாபரின் சந்ததியினர் என்று நீங்கள் கூறினால், நீங்கள் ராணா சங்காவின் சந்ததியினர். ஆகையால் அவர், ஒரு துரோகி என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பாபரை விமர்சிக்கிறோம். ஆனால் ராணா சங்காவை அல்ல” எனத் தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், தனது கூற்றில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர், "இது ஒரு வரலாற்று உண்மை. இப்போதெல்லாம், இந்திய முஸ்லிம்களிடம் பாபரின் டிஎன்ஏ இருப்பதாகக் கூறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்திய முஸ்லிம்கள் பாபரை தங்கள் தலைவராகக் கருதுவதில்லை. பாபர் மதத்துடன் வரவில்லை; அவர் ஒரு வாளுடன் வந்தார். இந்திய முஸ்லிம்களின் கொள்கைகள் சூஃபி துறவிகளின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளன.
பாபரை ஒரு வெளிநாட்டுப் படையெடுப்பாளர் என்று அழைப்பது எளிது என்று நான் ராஜ்யசபாவில் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவரை யார் அழைத்தார்கள்? ’பாபர்நாமா’ உள்ளிட்ட வரலாற்றுப் பதிவுகள், ராணா சங்கா பாபரை இப்ராஹிம் லோடிக்கு எதிராகப் போராட அழைத்ததாகக் கூறுகின்றன.
பின்னர், நிச்சயமாக, நிலைமை மாறியது. ராணா சங்காவே கான்வா போரில் பாபருக்கு எதிராகப் போராடினார். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் உண்மையை மட்டுமே கூறினேன். நான் எழுப்பிய மிக முக்கியமான பிரச்னை, நமது நாட்டின் கங்கை-ஜமுனி கலாசாரத்தை பாஜக எவ்வாறு அழித்து வருகிறது என்பதுதான். முஸ்லிம்கள் ஹோலி பண்டிகையை விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது பண்டிகைகளின்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது கிராமத்திலும், பல கிராமங்களிலும், முஸ்லிம்கள் உட்பட அனைவரும் ஒன்றாக ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். சிலர் மீண்டும் மீண்டும் மற்றவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். ஆனால் இந்த நாடு இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.