ARTICLE AD BOX
எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வரும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்த கோரி யாழ் தீவகா மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இலங்கை யாழ்பாணத்தில் நடத்தினர்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவர்கள் மருத்துவமனையில் அவந்தி வழியாக ராசவின் தோட்ட வீதியினை அடைந்து, யாழ் இந்திய துணை தூதரகத்திற்குச் சென்றனர்.
இந்த ஆர்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட மீனவர்கள் ‘தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத! வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்! அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே! வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு!’ என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து யாழ்பாண காவல்துறையினர் போராட்டகாரர்கள் மனு வழங்குவதற்கு அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களில் சிலர் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர்.
இதேவேளை போராட்டக்காரர்கள் வந்த வழிகளில் போக்குவரத்து போலீசார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை அந்த வழியாக பயணிக்க அனுமதி மறுத்தனர். மேலும் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் உள்ளிட்டவைகளுடன் இந்திய துணை தூதரக அலுவலக வளாகத்தில் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.