ARTICLE AD BOX
துபாய்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் தற்போது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதனிடையே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல், இந்திய அளவில் முகமது ஷமி கடினமான பவுலர் என்றும் அவரது பந்துவீச்சை பயிற்சியின்போது கூட எதிர்கொள்ள விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சர்வதேச அளவில் ரஷித் கான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றும் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு உள்ளதாகவும் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
Related Tags :