ARTICLE AD BOX
துபையில் உள்ள இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இணைந்தார்.
கடந்த பிப்.18ஆம் தேதி தந்தை மறைவால் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தாயகம் திரும்பினார்.
பயிற்சியாளர் இல்லாமலே இந்தியா அணி 2 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டிய நால்வரும் நன்றாக பந்துவீசுவதால் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
துபைக்கு சென்றடைந்த மோர்னே மோர்கெல் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் நீண்ட நேரம் உரையாடினார்.
கில் தவிர மற்ற அனைவரும் பயிற்சி செய்தார்கள். ரிஷப் பந்த் உடல்நிலை குணமாகி பயிற்சிசெய்து வருகிறார்.
மார்ச்.2ஆம் தேதி நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவிருக்கிறது.
கடைசியாக இந்திய அணி 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
இந்தியாவிற்கான போட்டிகள் அனைத்தும் துபையில் மட்டுமே நடைபெறுகின்றன. சுழல் பந்துக்கு சாதகமாக உள்ள திடல் இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.