ARTICLE AD BOX
பணகுடி: புதிய கல்விக் கொள்கையின் பெயரில் இந்தியை மீண்டும் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. நெல்லையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணகுடி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னதாக பேரணியாக சென்று இஸ்ரோ மையம் முன்பு சாலையில் அமர்ந்து இந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திமுக நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
The post இந்தி திணிப்பு இஸ்ரோ மையம் முன்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.