இந்தி கவிதைக்காக தடுமாறிய 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய சம்பவம்.! பள்ளி நிர்வாகம் அதிரடி.!

2 days ago
ARTICLE AD BOX

இந்தி எதிர்ப்பு சர்ச்சை

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்காக காலம் காலமாக போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இப்போது வரை இந்தி எதிர்ப்பு சர்ச்சைகள் குறைந்த பாடில்லை. தனியார் பள்ளிகள் மற்றும் பல சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி கட்டாய பாடமாக திணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தி கவிதை

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வருகின்ற ஒரு மூன்றாம் வகுப்பு சிறுவன் இந்தி கவிதையை சரிவர ஒப்பிக்கவில்லை என்று ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருப்பூர்: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது.! 

சிறுவனுக்கு மன உளைச்சல்

மாணவன் ஹிந்தியை சரிவர உச்சரிக்கவில்லை என்ற காரணத்தால் ஆசிரியை அந்த மாணவனை அடித்துள்ளார். மேலும், "இனி உன்னை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன்." என்று கடுமையாக பேசியுள்ளார். இதில், மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்து இருக்கின்றான். 

ஆசிரியை சஸ்பெண்ட்

எனவே, பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வந்து தனது மகனுக்கு நடந்த கொடுமை குறித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளிகளின் செல்போனில் பகீர் வீடியோ.. விசாரணையில் அதிர்ச்சி.!

Read Entire Article