இந்தி கற்றுக்கொள்ளுங்கள்.. சோஹோ ஸ்ரீதர் வேம்பு.. வார்த்தையை விட்டு.. இப்படி மாட்டிக்கிட்டாரே!

1 day ago
ARTICLE AD BOX

இந்தி கற்றுக்கொள்ளுங்கள்.. சோஹோ ஸ்ரீதர் வேம்பு.. வார்த்தையை விட்டு.. இப்படி மாட்டிக்கிட்டாரே!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி தெரியாமல் இருப்பது தமிழர்களுக்கு கிட்டத்தட்ட ஊனம் போன்றது. நாம் இந்தி கற்பதே ஸ்மாட்டான முடிவாக இருக்கும். நான் 5 கடந்த வருடங்களாக இந்தி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் இப்போது இந்தி மொழியில் 20% வரை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், என்று சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் துடிப்பதால் இதற்கு எதிரியாக் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

zoho sridhar vembu

முக்கியமாக இந்தியை மூன்றாம் மொழியாக, ரகசியமாக இந்த திட்டம் திணிக்கும் என்ற கோபம் தமிழர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்தி திணிப்பிற்கு ஆதரவாக சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு:

ஆனால் சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு இந்தி திணிப்பிற்கு ஆதரவாக செய்துள்ள போஸ்டில், எங்களின் சோஹோ நிறுவனம் வேகமாக வளர வளர... தமிழ்நாட்டின் உட்பகுதியில் உள்ள பொறியாளர்கள் மும்பை, டெல்லி போன்ற வடஇந்திய பகுதிகளில் உள்ள கஸ்டமர்கள் உடன் பேசும் சூழல் உள்ளது. எங்களின் பெரும்பாலான பிஸ்னஸ் குஜராத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் எங்களுக்காக பணியாற்றும் ஊழியர்களின் பணிகள் இது போன்ற கஸ்டமர்களை நம்பியே உள்ளது.

இந்தி தெரியாமல் இருப்பது தமிழர்களுக்கு கிட்டத்தட்ட ஊனம் போன்றது. நாம் இந்தி கற்பதே ஸ்மாட்டான முடிவாக இருக்கும். நான் 5 கடந்த வருடங்களாக இந்தி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் இப்போது இந்தி மொழியில் 20% வரை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியலை விடுங்கள்.. மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.. இந்தி கற்றுக் கொள்வோம், என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

zoho sridhar vembu

அப்துல்லா எழுப்பிய கேள்வி

இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு செய்த இன்னொரு போஸ்டில், இன்று #LEAP நிகழ்வில் சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஹைதம் அல்ஒஹாலி மற்றும் அவரது குழுவினரை சந்தித்தேன். சவுதி அரேபியாவில் எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஆக்கபூர்வமாக, ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நிகழ்வில் முக்கியமான உரை நிகழ்த்தினேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நன்றி என்று ஆங்கிலத்திலும், அரபியில் நன்றி என்றும் போஸ்ட் செய்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

இதற்கு திமுக எம்பி புதுக்கோட்டை அப்துல்லா செய்துள்ள பதிலில், அன்புள்ள திரு வேம்பு சார், சவுதி அரேபியாவில் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாழ்த்துக்கள்! அரேபிய மொழியைக் கற்காமல் நீங்கள் இதை எப்படி அடைந்தீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. அரபி தெரியாமல் இதை விரிவு செய்யும் நீங்கள்.. இப்போது தமிழர்கள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துவது மட்டும் ஏன்? என்று நறுக் கேள்வி கேட்டுள்ளார்.

Dear Mr. Vembu sir, congratulations on expanding your business in Saudi Arabia! It’s impressive how you achieved this WITHOUT LEARNING ARABIC. So, why are you insisting that Tamils must learn Hindi? 🤔 https://t.co/hVWqZZqbaz

— Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) February 26, 2025

உங்கள் கருத்து என்ன?

இந்தி திணிப்பிற்கு ஆதரவாக சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Take a Poll

More From
Prev
Next
English summary
Zoho Sridhar Vembu gets a befitting reply from DMK MP Abdullah for his Hindi Impostion post
Read Entire Article