ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்களும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் உங்களில் ஒருவன் என்ற மடலை நாள்தோறும் திமுகவினருக்கு எழுதி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று எழுதியுள்ள மடலில் இந்தி என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருதமும் பிற மொழிகளும் கலந்து உருவான ஒரு கலப்பு மொழி.தமிழ் ஆயிரக்கணக்கான பழமையான மொழி. உ,பி பீகார், ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்தியபிரதேசம். ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திலிருந்த எண்ணற்ற மொழிகளை அழித்துத் தான் இந்தி வளர்ந்துள்ளது. உ.பி. பீகார் மக்களின் தாய்மொழி இந்தி அல்ல என்று பட்டியலிட்டுள்ளார்.
மேலும் உங்களின் ஒருவன் மடலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஆங்கிலத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு இந்தி என்னென்ன மொழிகளை அழித்துள்ளது என்பதை பட்டியலிட்டு தமிழ்நாடு ஏன் இந்தியை எதிர்க்கிறது என்ற காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் பள்ளிகளில் தாய்மொழியை கட்டாயமாக்கும் சட்டம் இயற்றுகிறார்கள். கர்நாடகாவிலும் இந்தி மொழிக்கான கட்டாயத் தேர்வை நீக்க வேண்டும் என்று அமைச்சர் மது பங்காரப்பாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்கமாட்டோம் என்ற வார்த்தைகள் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாகவில் முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு பெரும் பேசுபொருளாகி உள்ளது. இந்திக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் ஆங்கிலப் பதிவு இந்தியா முழுவதிலும் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
My dear sisters and brothers from other states,
Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj, Bundeli, Garhwali, Kumaoni, Magahi, Marwari, Malvi, Chhattisgarhi, Santhali, Angika, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Mundari and… pic.twitter.com/VhkWtCDHV9