ARTICLE AD BOX

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், “FAILURE மாடல் அரசின் விளம்பர மாடல்” திரு. ஸ்டாலின் உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை. தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?
உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே , மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தான்! தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், “ரூ” போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்!
பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்! 72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தான்! இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் “தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்” என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..! என்று பதிவிட்டுள்ளார்.