ARTICLE AD BOX
இந்த ஒரு இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை மடமடவெ என குறையும் என்கிறார்கள் மேலும் இந்த இலையால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்…
இது குறித்து : நிறைய பேர் பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக தான் சேர்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த இலையை சமையலில் சேர்ப்பதை தவிர இதை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பது தெரியுமா உங்களுக்கு. இந்த இலையில் வைட்டமின் ஏ வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 மட்டுமின்றி மெக்னீசியம் கால்சியம் இரும்புச்சத்து போன்றவைகளும் அதிகமாக காணப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்திலும் இந்த பிரியாணியலை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இப்போது பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்..
செரிமான பிரச்சனைகள் நீங்கும் : நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்கள் என்றால் பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள் இதனால் அந்த இலையில் உள்ள சத்துக்கள் செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி உணவுகளை சிறியதாக உடைத்தெறிந்து அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது மேலும் பிரியாணி இலையில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் புண்ணை ஆற்றும் குடல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை குடிப்பது மிகவும் நல்லது…
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : பிரியாணி இலைகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன இதனால் இந்த பிரியாணி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தினமும் அரை டம்ளர் இந்த நீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று நோய் தொற்றுகளின் அபாயம் குறையும்..
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது : பிரியாணி இலை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இயற்கை வழியில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நினைத்தால் காபி டீக்கு பதிலாக பிரியாணி இலை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்..
அதேபோல் இதய பிரச்சினை தடுக்கப்படுகிறது எடை இழப்பு குறைக்கப்படுகிறது மேலும் மாதவிடாய் பிடிப்புகள் நீங்கும் அதேபோல் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படுவதற்கு இந்த பிரியாணியிலை உதவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!