”இந்த அரிசியை மிஸ் பண்ணாதீங்க;புற்றுநோய் வரும் சாத்தியம் குறையும்” - டாக்டர் சிவராமன்

9 hours ago
ARTICLE AD BOX

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் தற்போதைய சூழலில் வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர், புற்றுநோய் அரிதாகவே காணப்பட்டது. ஆனால், சமீப நாள்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

Advertisment

சத்தான உணவுகளில் கருப்பு கவுனி அரிசி பிரதான இடம் வகிப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். கருப்பு கவுனி அரிசியை தினசரி ஒரு கைப்பிடி அளவிற்காவது சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவதாக அவர் ஹெல்தி பாஸ்கெட் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருப்பு கவுனி அரிசியில் அந்தோசைனின்ஸ் என்ற சத்து இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். கத்திரிக்காய், நாவல் பழம், ப்ளூபெர்ரி ஆகியவற்றிலும் அந்தோசைனின்ஸ் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இது புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுவதாக சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவற்றை கொடுப்பதன் மூலம் அவர்களை குணப்படுத்த முடியாது. எனினும், கருப்பு கவுனி அரிசியை தினசரி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறையும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article