*இந்த அடிப்படை உணமையைக்கூட அறியாத தற்குறி அண்ணாமலை”! தமிழன் பிரசன்னா சாடல்

4 days ago
ARTICLE AD BOX

சென்னை தேனாம்பேட்டை அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ அண்ணாமலை நேற்றைக்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடந்தினார். அதில் ஒரு அரசியல் கட்சித் தலைவரை பெயரை குறிப்பிட்டு, அவர் பள்ளி நடத்துகிறார்; திமுகவின் தலைவர்கள் பள்ளி நடத்துகிறார்கள் என்றெல்லாம் கூறினார்..

இந்த நாட்டில் யார் பள்ளி நடத்துகிறார் என்பதா பிரச்சனை? அல்லது ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய Sarva Shiksha Abhiyan என்ற திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய; samagra shiksha abhiyan என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த திட்டத்திற்கு கொடுக்கபட வேண்டிய நிதியை பாசிச பாஜக ஒன்றிய அரசு தரவில்லை என்பதுதான் பிரச்சனை.

நமக்கு உள்ள கேள்வி கொடுக்க வேண்டிய நிதியை பாசிச பாஜக அரசாங்கம் அரசு தர மறுக்கிறது. இன்றைக்கு மாநிலத்தில் கட்சி நடத்தி கொண்டு ஒரு கவுன்சிலர் ஆகக்கூட வக்கு இல்லாமல், அண்ணாமலை ஏன் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து, நமக்கு கிடைக்க வேண்டிய நிதி ஏன் பெற்று கொடுக்க முடியவில்லை என்பதுதான் கேள்வி.

இந்த ஆவணம்தான் samagra shiksha abhiyan என்று சொல்ல கூடிய ஆவணம், ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் போடப்பட்ட ஒப்பந்த ஆவணம். 

அதன் அடிப்படையில் 21 பக்க MoU-ல் 9-வது பக்கத்தில், தமிழ்நாடு இந்த திட்டத்திற்கு செய்ய வேண்டியவை என Financial Sencation for tamilnadu என்ற Column-ல் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு கொடுத்து வந்தவர்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தடத்து நிறுத்துகிறார்கள். இந்த ஆண்டு நமக்கு கிடைக்க வேண்டிய நிதியான ரூ.2145 கோடி நிதியை கேட்டால், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் சொல்கிறார், நீங்கள் மும்மொழி கொள்கையையும், புதிய பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் நிதி என்று சொல்கிறார்.

அப்படி எந்த ஒரு Condition-உம் இந்த 61 பக்க ஆவணத்தில் இல்லை. இடைநிற்றல் காரணமாக பள்ளிக்கு வராத சாதாரண சாமனிய மக்களின் குழந்தைகளை - மாணவர்களைக் கண்டறிந்து, இடைநிற்றலைத் தடுத்து, தமிழ்நாட்டில் இடைநிற்றலே இல்லாத நிலையை அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் உருவாக்கி கல்வி வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளோம்.

இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தது, அதை கலைஞர் வலியுறுத்தினார், அதைத்தான் அனைவருக்கும் கல்வி என காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதன்மூலம் மத்திய அரசாங்கம் 60% மாநில அரசாங்கம் 40% நிதி கொடுக்கப்படுகிறது.

நேற்று முதலமைச்சர் அவர்கள் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஏன் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கப்படவில்லை? பீகார், ஆந்திரா, ஒரிசா போன்ற மாநிலகளுக்கு கொடுத்த நிதியை ஏன் எங்களுக்கு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதைபோல இரண்டு நாட்களுக்கு முன்னாள் தேசிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தரவில்லை என முதலமைச்சர் கேட்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தொடர்ச்சியாக புறக்கணிக்கார்கள் என்ற காரணத்தினால், தமிழ்நாட்டு மக்களை பாஜகவிற்கு பிடிக்கவில்லை. ஒன்றியத்தில் இருக்கிற அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த நிதியையும் மடைமாற்றம் செய்து எங்கள் மக்களின் உணர்வுகளில் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களின் கல்வியிலும் கை வைக்கிறது பாஜக.

பாஜக அரசின் பிரநிதியாக இங்கு ஒரு அமைச்சர் இருக்கிறார், எதுவும் அறியாத தற்குறியாக உள்ள பாஜக மாநில தலைவர் இங்கு இருக்கிறார். அவர் பத்திரிக்கையாளரிடம் தமிழ்நாட்டில் இருக்கிற பள்ளிகளில் தமிழ் காட்டாய பாடமில்லை என்று சொல்லி, எங்களின் நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரு பள்ளியின் Browser-யை எடுத்து, அதில் ஆங்கிலம்தான் காட்டாயம் என காட்டினார். 

திமுக எப்போதும் ஹிந்தி திணிப்பிற்கு எதிரி, ஆனால் ஹிந்திக்கு அல்ல. பாஜகவின் நோக்கம் ஹிந்தி, ஹிந்து, ஹிந்துத்துவா என்ற அடிப்படையில் ஹிந்தியை முதலில் திணித்து சமஸ்கிருத்தை கொன்டுவருகிறது. எழுத்து வடிவம்  கூட இல்லாத ஒரு மொழிக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி எங்கள் தாய்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் செயலை பாஜக அரசு செய்கிறது.

கலைஞர் ஆட்சியில் 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம், இதில் எம்.பி நடத்துகிற ஸ்கூல், விஜய் நடத்துகிற ஸ்கூல், ஏன் அண்ணாமலை மனைவி நடத்துகிற ஸ்கூல் என யார் பள்ளி நடத்தினாலும், இங்கு தமிழ் பாடம் கட்டாயம்.

இந்த அடிப்படை விசயம்கூட தெரியாமல், தற்குறி தனமாக ஆங்கில பாடம்தான் கட்டாயம், தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என கேள்வி கேட்கிறார்.  இந்தச் சட்டத்தை முதலில் எதிர்த்தது, ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள்; அதாவது பாஜக அரசின் பொறுப்பில் இருக்கக்கூடிய அந்த கல்வி நிறுவனங்கள்தான் இந்த சட்டத்தை எதிர்த்தனர். இந்த சட்டத்தை எதிர்த்து கேஸ் போட்ட பள்ளி எது என்று அண்ணாமலையை பார்க்க சொல்லுங்கள். அப்படி பார்த்தால் ஒரு வித்தியாசம் தெரியும். யார் பின்னணியில் இயங்குவது என்பதும் தெரியும்.

உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் 2006-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் செல்லும் என உத்தரவிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் எல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம். இந்த அடிப்படை அறிவு கூட அந்த தற்குறி தலைவர் அண்ணாமலைக்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

பாஜகவின் தேசிய கல்வி கொள்கையைப் பற்றி நான் ஒரு மணி நேரம் பேசலாம். புதிய கல்வி கொள்கையின் 27வது பக்கத்தில் உள்ள Para-வில் மூன்று மொழி பரிந்துரைக்கப்பட்டது. அதில் இரண்டு மொழி இந்திய மொழி, இன்னொரு மொழி வேறுநாட்டு மொழி இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் சொல்ல்விட்டு Terms and condition-ல் கடைசியாக சமஸ்கிருதம் ஒரு மொழியாக இருக்கும் என்று சொல்கிறது. இது ஆரிய தந்திரம், கேட்டால் உங்கள் பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி படிக்கிறார்கள், எங்கள் பிள்ளை ஹிந்தி படிக்கவில்லை என்கிறார்கள்.

நான் அண்ணாமலைக்கு சொல்கிறேன் இங்கே யாரும் ஹிந்திக்கு எதிரி இல்லை. சட்டப்பூர்வமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தடுக்கிறது. அதை தட்டி கேட்காமல் இவர்கள் பள்ளி நடத்துகிறார்கள், அவர்கள் பள்ளி நடத்துகிறார்கள் என்று சொல்வது மடைமைதனம்.

Get out Modi என சொல்லிப்பார் என்கிறார். துணை முதலமைச்சரை பார்த்து ஒறுமையில் பேசுகிறார். கேவலம் கவுன்சிலர்கூட ஆகமுடியாத அண்ணாமலை எங்கள் தலைவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார். போஸ்டர் ஒட்டுவேன், செங்கலை புடுங்குவேன் என சொல்கிறார், செங்கலை புடுங்க அண்ணாமலை தேவையில்லை. 

இந்த புதிய கல்விக்கொள்கை வந்த போது நாங்கள் ஆட்சியில் இல்லை. 2016-2017 காலக்கட்டங்களில் எங்களின் தலைவர் ஒரு கல்வியாளர் குழுவை அமைத்து, அந்த கல்வியாளர் குழு ஒரு Recommandation-யை கொடுத்தார்கள். அன்றைக்கே நாங்கள் ஒன்றிய அரசிடம் சொன்னோம்: மும்மொழி கொள்கை தமிழகத்தில் செல்லாது. ஏன் என்றால் அண்ணா அவர்கள் இந்த மண்ணிற்கும் மாநிலத்திற்கும் தேவையான மொழிக்கொள்கையை உருவாக்கி, இருமொழி கொள்கையை வழங்கிச் சென்றுள்ளார். 

அந்த இருமொழி கொள்கை அடிப்படையில் இந்த மாநில வளர்ச்சி பெற்று இருக்கிறது. உத்திர பிரதேசத்தில் மும்மொழி கொள்கை என்கிறார்கள். அந்த மொழி என்னவென்று கேட்டால் அண்ணாமலைக்கு தெரியவில்லை. என்னவென்றால் அங்கு இருக்கக்கூடிய மொழிகள் அழிந்து போய்விட்டது. ஒன்றிய அமைச்சர் தரமேந்திர பிரதான் ஒரிசாவை சார்ந்தாவர். அவரின் தாய்மொழி எங்கே இருக்கிறது. அங்கு ஹிந்திதான் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் குடிமக்கள். எங்களுடைய நிதியை தர வேண்டும் என்று கேட்டால், இனி ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை ஏற்றுகொள்ள வேண்டும்; தேசிய கல்விக் கொள்கையை வேண்டும் என்பது ஏதேச்சதிகாரம்; பாசிசம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article