இந்த 5 நிறுவன பங்குகளை வாங்கிப் போடுங்க.. டாப்புக்கு வரலாம்.. க்ரோக் சொன்ன ஐடியா!

11 hours ago
ARTICLE AD BOX

இந்த 5 நிறுவன பங்குகளை வாங்கிப் போடுங்க.. டாப்புக்கு வரலாம்.. க்ரோக் சொன்ன ஐடியா!

Chennai
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக எலான் மஸ்கின் X நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) AI மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது. இதன் துல்லியமான பதில்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, இது தமிழ், இந்தி உட்பட எந்த மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளிப்பதால் இதன் நம்பகத்தன்மை குறித்து பலரும் சிலாகித்துப் பேசுகின்றனர். இந்நிலையில், க்ரோக் AI பங்குச் சந்தை நிபுணராகவும் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே க்ரோக் AI-யிடம் பங்குச் சந்தை தொடர்பான ஒரு கேள்வியை வட இந்திய ஊடகம் ஒன்று முன் வைத்ததாம். இதோ அந்த கேள்வியும், பதிலும் பாருங்கள். "எனக்கு 40 வயது ஆகிறது, நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். 5 வருடங்களுக்கு முதலீடு செய்யக்கூடிய 5 பங்குகளை பரிந்துரைக்கவும்" என்பதே அந்தக் கேள்வி. க்ரோக் AI அளித்த பதில் இதோ...

share market AI Grok

நீங்கள் 40 வயதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்குவது ஒரு சிறந்த முடிவு. 5 வருட முதலீட்டு காலம் நல்லது, ஏனெனில் இது சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கி நீண்ட கால வளர்ச்சியைப் பெற உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய 5 பங்குகள் கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் பொதுவான ட்ரெண்ட் மற்றும் வலுவான அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் அல்லது நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.

1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

  • துறை: எண்ணெய், எரிவாயு, தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம்
  • ஏன்: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சில்லறை வணிகத்தில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும், பசுமை ஆற்றலில் செய்யும் முதலீடு எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.

2.டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)

  • துறை: தகவல் தொழில்நுட்பம் (IT)
  • ஏன்: டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிளவுட் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், TCS ஒரு நிலையான மற்றும் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது.

3.HDFC வங்கி (HDFC Bank)

  • துறை: வங்கி மற்றும் நிதி
  • ஏன்: வலுவான இருப்புநிலை, தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் தொகுப்பு மற்றும் டிஜிட்டல் வங்கியில் முன்னணியில் இருப்பது ஆகியவை நீண்ட காலத்திற்கு நம்பகமானதாக ஆக்குகிறது.

4.பாரதி ஏர்டெல் (Bharti Airtel)

  • துறை: தொலைத்தொடர்பு
  • ஏன்: 5G சேவை அறிமுகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை இதை வரவேற்புக்குரியதாக ஆக்குகின்றன. மேலும், நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் தனது கடனையும் குறைத்துள்ளது.

5.டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

  • துறை: ஆட்டோமொபைல்
  • ஏன்: எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) உற்பத்தியில் முன்னணியில் இருக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், ஜாகுவார் லேண்ட் ரோவரின் மீட்சி இதை வலுவானதாக ஆக்குகிறது.

இந்த பங்குகள் தொழில்நுட்பம், நிதி, தொலைத்தொடர்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளைச் சேர்ந்தவை. இவை இந்திய பொருளாதாரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது. இருப்பினும், பங்குச் சந்தையில் ஆபத்து உள்ளது, எனவே உங்கள் இடர் தாங்கும் திறன் மற்றும் நிதி இலக்குகளின் அடிப்படையில் முடிவெடுங்கள். இவ்வாறு க்ரூக் பதில் தந்துள்ளதாம். இங்குதான் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.

5 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் அவ்வப்போது பயனாளர்களால் விமர்சனங்களுக்கு உள்ளான நிறுவனமாக உள்ளது. ஆனால் க்ரோக் அதையும் சிறப்பாகவே பரிந்துரை செய்துள்ளது. எனவே இது கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை உண்மையிலேயே கணிக்கிறதா என்ற சந்தேகம் வராமல் இல்லை. நீங்க சொல்லுங்க, இதை நம்பலாமா?

More From
Prev
Next
English summary
This news article discusses Grok AI, developed by Elon Musk's xAI, and its capability to provide accurate responses, including in Hindi. The article highlights an instance where Grok AI was asked to recommend five stocks for a 40-year-old individual looking to invest for five years in the Indian stock market. Grok AI suggested Reliance Industries, TCS, HDFC Bank, Bharti Airtel, and Tata Motors, providing reasons for each recommendation based on their growth potential in various sectors of the Indian economy. The article also includes a disclaimer advising investors to conduct their own research and consult with a financial advisor before making investment decisions.
Read Entire Article