ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/P7dXs56I536eGSwRA8Ja.jpg)
நம் இரத்தத்தில் பல வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் தேவைக்கு அதிகமாக இருந்தால், அது ரத்தக் குழாய்களில் மெழுகு போல் ஒட்டிக்கொள்ளும். இதனால், ரத்த ஓட்டம் சீரற்றதாக இருக்கும். இதன் விளைவாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL குறையும் போது இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/3jzN2jbGfJDqXl0AgW2Z.jpg)
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் மற்றும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் சில உணவுகள் இருப்பதாக ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமான உடற்பயிற்சியுடன் இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/OKBK5cqdRibxvzp1cXAJ.jpg)
பாதாம்
ஹார்வர்ட் ஹெல்த் படி, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்ற நட்ஸ், அதிக கொழுப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். இந்த பொருட்களில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் ஃபாட்டி ஆசிட்கள் உள்ளன. அவை கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. நட்ஸ்ஸில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. அவற்றில் அதிக அளவு ஒமேகா -3 ஃபாட்டி ஆசிட்கள் உள்ளன, அவை இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/kLQkRZxT4XhCE0QDmU2v.jpg)
பீன்ஸ்
பீன்ஸில் கிட்னி பீன்ஸ், உளுந்து, பருப்பு போன்றவை அடங்கும், இதில் அதிக அளவு நார்ச்சத்து, ப்ரோடீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை அனைத்தும் அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது எல்டிஎல் (கெட்ட) கொழுப்பை உறிஞ்சி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. பீன்ஸை தொடர்ந்து சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/EyPNOinQniGzGm45JXOp.jpg)
கத்தரிக்காய்
கத்தரிக்காய்யில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன, இது அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியமும் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கத்தரிக்காயை சாப்பிடுவதால் உடலில் உள்ள LDL கெட்ட கொழுப்பைக் குறைத்து, HDL நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/5oKOxArOD5T0Ioyn0igq.jpg)
ஓட்ஸ்
பீட்டா-குளுக்கன் என்பது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும், இது ஓட்ஸில் காணப்படுகிறது. இது கெட்ட கொழுப்பை உறிஞ்சி உடலில் இருந்து நீக்குகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸை தொடர்ந்து சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/aAcpSdgtx5vBKkKxZJD1.jpg)
முழு தானியங்கள்
முழு தானியங்கள், அதாவது பிரவுன் ரைஸ், ஓட்ஸ் மற்றும் குயினோவா ஆகியவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. அவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், இது கொலஸ்ட்ராலை உறிஞ்சி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. முழு தானியங்களை சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.