ARTICLE AD BOX
இந்த 3 ராசிக்கார ஆண்கள் அன்பானவங்க மட்டுமல்ல.. ரொம்பவும் ரொமான்டிக்கானவங்களும் கூட..
Most Caring And Romantic Zodiac Signs In Tamil: வேத ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கிரகங்களும் உள்ளன. இந்த 9 கிரகங்கள் தான் 12 ராசிகளையும் ஆட்சி செய்கின்றன. இந்த ராசிகளை ஆளும் கிரகங்கள் தான் அந்த ராசிக்காரரின் குணாதிசயத்தையும், எதிர்காலத்தையும் மற்றும் பிற விஷயங்களையும் தீர்மானிக்கின்றன. இதனால் தான் இவ்வுலகில் பிறந்தவர்களின் குணாதியமும், இயல்பும் ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ளன.
அதுவும் சில ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் அன்பானவராக இருப்பர். அதுவும் இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பதோடு, மிகவும் ரொமான்டிக்கானவராகவும் இருப்பர். சொல்லப்போனால் ஒரு சிறந்த கணவன் அல்லது வாழ்க்கைத் துணையாக இருப்பர். இப்போது எந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் அப்படி அன்பானவராகவும், ரொமான்டிக்கானவராகவும் இருப்பர் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்கள் மற்ற ராசியைச் சேர்ந்த ஆண்களை விட மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். ஏனெனில் இவர்களிடம் இயற்கையாகவே காதல் உணர்வு நிரம்பியிருக்கும். இதற்கு இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் தான் காரணம். ஏனெனில் சுக்கிரன் தான் காதல், அழகு ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் எப்போதும் தனது துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பார்கள். தனது காதல் வாழ்க்கை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்க அடிக்கடி தனது துணைக்கு ஏதாவது பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களால் தனது துணையை விட்டு நீண்ட காலம் பிரிந்திருக்க முடியாது.
கடகம்
கடக ராசிக்காரர்களும் மிகுந்த காதல் உணர்வு கொண்டவர்கள். இவர்கள் தங்கள் துணையை கண்களில் வைத்து தாங்குவார்கள். இந்த ராசிக்காரர்களால் தனது துணை வருத்தமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்போது அவர்களை மகிழ்விக்க என்ன செய்யலாம் என்று யோசித்து, அதற்கான முயற்சிகளில் இறங்குவார்கள். மேலும் இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். சொல்லாமலேயே தனது துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்த ஆண்கள் கோபக்காரர்களாக தெரியலாம். ஆனால் இவர்கள் தங்கள் துணையை மிகவும் கவனித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வேலையை செய்யும் போதும் தனது துணையின் ஆலோசனையையும் பெறுவார்கள். மேலும் தனது துணையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள். இந்த ராசிக்கார ஆண்கள் தனது துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். இயற்கையாகவே மிகவும் அக்கறை கொண்டவர்கள். அடிக்கடி தனது துணைக்கு ஆச்சரியமளித்து சந்தோஷப்படுத்துவார்கள். அதே சதயம் இவர்கள் சுயமரியாதையை கொஞ்சம் அதிகம் விரும்புவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)