ARTICLE AD BOX
Chennai Super Kings: ஐபிஎல் அணிகளில் மிக முக்கியமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 17 சீசன்களில் 10 சீசனில் இறுதி போட்டி வரை முன்னேறி அதில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சென்னை அணி வென்றது. இச்சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதனை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்த மூன்று முக்கிய வீரர்கள் இருந்தனர். அந்த மூன்று வீரர்கள் தற்போது உள்ள அணியில் இல்லை. அவர்கள் இல்லாதது அணிக்கு எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பிறகு மெகா ஏலம் நடந்தது. அதில் எல்லா அணிகளும் மொத்தமாக வீரர்களை குழப்பிப்போட்டுக்கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்கலை ஏலத்தில் விட்டது. அந்த வகையில், சிஎஸ்கே அணியில் இருந்த சில முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை குறித்துதான் தற்போது பார்க்கப்போகிறோம்.
மேலும் படிங்க: WWE இனி டிவி சேனலில் பார்க்க முடியாது - வெளியான அதிர்ச்சி தகவல்!
முஸ்தாபிசுர் ரஹ்மான்
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இருந்தார். டேத் ஓவர்களில் இவர் வீசும் ஸ்லோவர் பால் பேட்ஸ்மேன்களை திணறச்செய்யும். அவர் அந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது பவுலிங் அவரேஜ் 22.71 ஆகும். இவர் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இல்லாதது அந்த அணிக்கு பிண்ணடைவை ஏற்படுத்தலாம்.
துஷார் தேஷ்பாண்டே
கடந்த ஆண்டில் சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் துஷார் தேஷ்பாண்டேவும் ஒருவர். அவர் அந்த அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட்களை வீழ்த்தியும், பந்துகளை கடத்தவும் செய்தார். அவர் அந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை கைபற்றினார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு பிரச்சனையாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டேரில் மிட்செல்
நியூசிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேரில் மிட்செல். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மிடில் ஆர்டரில் களம் இறங்கும் இவர், தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை பாதுகாக்கவும், மற்ற நேரங்களில் அதிரடியாக ரன்களை சேர்க்கவும் செய்தார். இவர் இந்த ஆண்டு சென்னை அணியில் இல்லாதது அந்த அணியில் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்துமா? என்பதை பார்க்க வேண்டும்.
ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால், சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்புவது சென்னை அணிக்கு சவாலவே இருக்கும். இருப்பினும் இந்த சவாலை எதிர்கொண்டு இந்த ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் 2025க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSk) அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ஷாம்ப் கலீல் அஹ்மத், ஷாம்ப் ரவீந்திரன், ஷாம்ப் த்ரிபாதி, விஜய் முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்ப்ரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ணன் கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
மேலும் படிங்க: பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ