ARTICLE AD BOX
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றால் அது முட்டை தான். முட்டையில் புரதம், ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளது. இதன் மூலம், தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. மேலும், முட்டையில் விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்புகள் வலுப்பெறுகிறது.
மேலும், முட்டையில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால், கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். அது மட்டும் இல்லாமல், முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள், நரம்பு மண்டலதை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, இதய நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது பெரிதும் உதவும்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க முட்டையை விட சிறந்த தேர்வு கிடையாது. முட்டை சாப்பிடுவதால், மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். இதனால் தான் படிக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தினமும் ஒரு முட்டை கொடுக்க வேண்டும். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளது. அதே சமயம், ,உத்தியில் கலோரிகள் குறைவாக உள்ளது.
எனவே, தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்க்குள் இருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, தவறாமல் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்து குறையும். எனவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுவது நல்லது.
The post இதை மட்டும் தினமும் சாப்பிடுங்க.. உங்களுக்கு புற்றுநோயே வராது!!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.