ARTICLE AD BOX
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படம் வெளியானது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர். சி இந்த படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படம் சுமார் ரூ. 100 போடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த படத்தில் பிரபல நடிகர் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் அருண் விஜய் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.