ARTICLE AD BOX
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாகவும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது துபாய் மண்ணில் முகாமிட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது.
விராட் கோலியை பாராட்டிய நியூசிலாந்து வீரர் :
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியானது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை எளிதாக வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் தற்போதைய நிலையில் முதலிடத்துடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள லீக் ஆட்டமானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நல்ல நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த போட்டியின் போது பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்துள்ள விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளது இந்திய அணியின் நிர்வாகத்திடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் கோப்பையை கைப்பற்றி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பாப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த போட்டியில் விளையாட இருக்கும் விராத் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 300-வது ஆட்டத்தில் விளையாட இருக்கிறார் என்பதால் பலரது மத்தியிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து விளையாடியிருந்த நியூஸிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான பிரேஸ்வெல் விராட் கோலி குறித்து சில உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : உண்மையிலேயே ஒருநாள் போட்டிகளில் 300 ஆட்டங்களில் விளையாடுவது என்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம். அதை மிகச் சிறப்பாக தற்போது விராட் கோலி நிகழ்த்தி காட்டி இருக்கிறார். அவருடைய கரியரில் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்துவது என்பது அசாதாரணமானது. ஆர்சிபி அணியில் இணைந்த போதுதான் முதல்முறையாக அவரை அருகில் இருந்து நெருக்கமாக பார்த்தேன்.
இதையும் படிங்க : அடுத்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 8 ஆவது இந்திய வீரராக விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் – இமாலய சாதனை
அப்போது நான் அவர் அருகில் இருந்து பார்த்தவரை ஒவ்வொரு போட்டிக்குமே அவர் முழு முயற்சியுடன் தயாராகிறார். அதன் காரணமாகவே அவரால் இவ்வளவு சிறப்பாக விளையாட முடிகிறது. இந்த தொடரிலும் அவரது ஆட்டம் அற்புதமாக இருப்பதாக பிரேஸ்வெல் பூரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
The post இதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்ல.. விராட் கோலி குறித்து பூரித்து பேசிய – நியூசிலாந்து வீரர் appeared first on Cric Tamil.