இதெல்லாம் ஒரு படமா?... மக்கள் உன் மீதுதான் கோபத்தில் இருக்கிறார்கள் – தனுஷை விமர்சித்த ராஜன்!

1 day ago
ARTICLE AD BOX

இதெல்லாம் ஒரு படமா?... மக்கள் உன் மீதுதான் கோபத்தில் இருக்கிறார்கள் – தனுஷை விமர்சித்த ராஜன்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை அடுத்து தனுஷின் இயக்கத்தில்  மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் உருவானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா விமலகீதாவின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தற்கால 2 கே கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமான ‘NEEK’ கடந்த வாரம் டிராகன் படத்துடன் ரிலீஸானது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடித்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பு இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் கே ராஜன் “ஒரு படத்தில் ஹீரோ பிராந்தி குடிக்கிறான். அதைப் பிடுங்கி ஹீரோயினும் குடிக்கிறாள். இதில் அந்த படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’ என்று டைட்டில். உன்மேல்தான் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு படமா?” எனக் கூறியுள்ளார்.
Read Entire Article