ARTICLE AD BOX

ஹேராம்: கமல் இயக்கி எழுதி தயாரித்த திரைப்படம் ஹேராம். 2000 ஆண்டில் வெளியான இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழி படமாக வெளியானது. இதில் கமலும் ஷாருக்கானும் நண்பர்களாக இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹேராம் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை. தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டன.
மூளைச்சலவை: படத்தின் கதைப்படி இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறையில் தன்னுடைய மனைவியை பறிகொடுக்கிறான் இந்துவான நம் ஹீரோ கமல். ஒரு கட்டத்தில் ஹீரோ மூளைச்சலவை செய்யப்படுகிறான். தனக்கு ஏற்பட்ட வேதனை பழிவாங்கும் உணர்வு மூளைச்சலவை எல்லாம் சேர்ந்து இஸ்லாமியர்களையும் காந்தியையும் வெறுக்க தொடங்குகிறான். இப்படிதான் கதை மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.
இன்று வரை பேசப்படும் படம்: இந்த படம் வெளியான போது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்று வரை இந்த படத்தைப் பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசை இளையராஜா. ஒளிப்பதிவாளர் திரு. ஹேராம் படத்தைப் பொறுத்த வரைக்கும் கமலுக்கு மட்டும் இது ஒரு முக்கியமான படம் இல்லை. வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இந்த படத்தில் இருக்கின்றன .இந்த நிலையில் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜி கமலை பற்றி ஒரு பேட்டியில் கூறியது இப்போது வைரலாகி வருகின்றது.
கமல் சொன்ன வார்த்தை: அவருடைய திரை வாழ்க்கையில் எந்த ஒரு இயக்குனரும் என்னை அப்படி சொல்லியதில்லை. கமல் தான் அப்படி முதன் முதலில் சொன்னார் என ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு உள்ளே சென்றதும் கமல் ராணி முகர்ஜியை பார்த்து உங்களுடைய மேக்கப்புகளை தயவு செய்து கலைத்துவிட்டு வாருங்கள் என கூறினாராம். உண்மையாகவா என கேட்டிருக்கிறார் ராணி முகர்ஜி.
யோசித்த ராணிமுகர்ஜி: கமலும் ஆமாம் என சொல்ல உள்ளே போன ராணி முகர்ஜி ஒரு வேளை மேக்கப் மிகவும் அதிகமாக இருக்கிறதோ என நினைத்து லைட்டாக துடைத்து விட்டுப் போனாராம். ஆனாலும் கமல் முகத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி விட்டு வாருங்கள் எனக் கூறி இருக்கிறார். ராணி முகர்ஜிக்கு இது புதியதாக இருந்திருக்கிறது. ஏனெனில் இதுவரை எந்த ஒரு இயக்குனரும் என்னை மேக்கப் இல்லாமல் வர சொன்னதே இல்லை என அந்த பேட்டியில் கூறினார்.

அதன் பிறகு சோப்பு போட்டு நன்கு முகத்தை கழுவி வந்து நின்றாராம் ராணி முகர்ஜி. அதன் பிறகு தான் கமல் ராணி முகர்ஜியை பார்த்து இதுதான் என்னுடைய அபர்ணா என ஹேராம் படத்தில் தனது மனைவியின் கதாபாத்திரத்தை கூறி இப்படி சொல்லி இருக்கிறார். இதைப்பற்றி ராணி முகர்ஜி கூறும்பொழுது மேக்கப் இல்லாமல் கூட கேமரா முன்பு நிற்க முடியும் என்பதை எனக்கு உணர்த்தியவர் கமல். கேமராக்களுக்கு மேக்கப்பை விட நம்முடைய ஒரிஜினாலிட்டி லுக் எந்த அளவு தூக்கி கொடுக்கும் என்பதை அன்று தான் நான் உணர்ந்து கொண்டேன் என ராணி முகர்ஜி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.