இதுபோதுமே Airtel.. 90 நாட்கள் வரை வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்? என்ன விலை?

3 hours ago
ARTICLE AD BOX

இதுபோதுமே Airtel.. 90 நாட்கள் வரை வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்? என்ன விலை?

News
oi-Prakash S
| Published: Thursday, February 27, 2025, 11:28 [IST]

வோடபோன் ஐடியா (VI), ஜியோ (Jio) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். அதுவும் இந்த ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 90 நாட்கள் வரை வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இதுபோதுமே Airtel.. 90 நாட்கள் வரை வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 929 plan) திட்டம் தான் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை தினமும் 2ஜிபி டேட்டா, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிட்ததக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

பின்பு ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில்ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கிறது. எனவே 22 ஓடிடி ஆப்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சோனிலிவ் (Sony LIV), சன்நெக்ஸ்ட் (Sun NXT) சந்தா வருகிறது.

மேலும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சாவ்பால் (Chaupal), எபிக்ஆன் (EPICon), டாகுபே (Docubay), பிளேஃபிளக்ஸ் (Playflix), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), கன்ச்சா லங்கா (Kanccha Lannka), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (FanCode), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), ஈராஸ்நவ் (ErosNow) கிடைக்கிறது.

இதுபோதுமே Airtel.. 90 நாட்கள் வரை வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்..

இதுதவிரநம்மஃபிளிக்ஸ் (Namma Flix), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV) மற்றும் டாலிவுட் பிளே (Dollywood Play) ஆகிய ஆப்களின் சந்தாவையும் பயன்படுத்தலாம். பின்பு பிரத்யேகமான ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription) கூட இதில் கிடைக்கிறது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Airtel Rs 929 Plan With Unlimited Voice Calls 90 Days Validity: check data and benefits
Read Entire Article