இதுதான் தொகுதி.. விஜய் டிக் அடித்த கடலோர மாவட்டம்.. 2026ல் அங்கதான் போட்டியிடுகிறாராமே.. அடடா!

4 days ago
ARTICLE AD BOX

இதுதான் தொகுதி.. விஜய் டிக் அடித்த கடலோர மாவட்டம்.. 2026ல் அங்கதான் போட்டியிடுகிறாராமே.. அடடா!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இணையத்தில் பிரபல PROக்கள் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனைகளை விஜய் தொடங்கி விட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையாக திட்டமிட்டு வேலைகளை செய்தால் இதை உயர்த்தலாம். விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.

vijay tamilaga vetri kazhagam

ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம். முறையாக வேலைகளை செய்தால் திட்டமிட்டபடி 20 சதவீதம் வரை வாக்கு வங்கி வாங்கலாம். தீவிரமாக பணிகளை செய்தால் அதைவிட கூடுதலாக வாக்கு வங்கி வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கி உள்ளாராம்.

ஸ்பெஷல் ஆலோசகர்

ஆதவ் அர்ஜுனா விஜயுடன் கரம் கோர்த்து உள்ளார். ஏற்கனவே கட்சியின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் பிரசாந்த் கிஷோர் உடன் திடீரென சந்திப்பு நடந்திருப்பது விவாதங்களை எழுப்பி உள்ளது.

இதற்கு காரணம் பிரஷாந்த் கிஷோர் விஜயின் ஸ்பெஷல் ஆலோசகராக மாற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் வரை ஸ்பெஷல் ஆலோசகர் என்ற பெயரில்.. விஜய்க்கு தனிப்பட்ட வகையில் ஆலோசனைகளை வழங்குவார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.

ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.

விஜய் போட்டியிட போகும் தொகுதி

இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இணையத்தில் பிரபல PROக்கள் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக கட்சியின் மீட்டிங்கில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறபடுகிறது. அதன்படி விஜய் போட்டியிட சாதகமான தொகுதியை சர்வே எடுக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் ஒருவேளை தேர்வாகாத பட்சத்தில் தருமபுரியில் போட்டியிடுவது பற்றியும் அவர் ஆலோசனை செய்துள்ளாராம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாக . கூறப்படுகிறது.

ஆனால் நாகப்பட்டினம்தான் விஜயின் முதல் தேர்வாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
English summary
Where will Vijay contest in 2026 Tamil Nadu assembly election as Tamilaga Vetri Kazhaga candidate
Read Entire Article