இதுதான் கர்மா.. பலுசிஸ்தான் ரயில் கடத்தல் பற்றி பாகிஸ்தான் என்ன சொல்கிறது பாருங்க!

5 hours ago
ARTICLE AD BOX

இதுதான் கர்மா.. பலுசிஸ்தான் ரயில் கடத்தல் பற்றி பாகிஸ்தான் என்ன சொல்கிறது பாருங்க!

International
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், தன் எல்லைப் பகுதிகளில் இந்தியா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷஃபாகத் அலி கான், பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள சில குழுக்களுக்கும் இதில் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.

pakistan Balochistan

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா உடனடியாக பதில் அளித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பாகிஸ்தானின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், உலக பயங்கரவாதத்தின் புகலிடம் எங்கே உள்ளது என்று எல்லாருக்கும் தெரியும். பாகிஸ்தான் மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு, தங்கள் நாட்டு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் கூறியுள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில் பலுசிஸ்தானின் குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சமீப காலமாக இந்த அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாகிஸ்தானில் என்ன பேசுகிறார்கள்?

இந்த ரயில் தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், பலுசிஸ்தானில் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவுவதாகவும், இதற்கு வெளிநாட்டு சக்திகளின் உதவி இருப்பதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் குழுக்களுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஒருவர் கூறுகையில், இந்தியா பலுசிஸ்தானையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. பலுசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

pakistan Balochistan

மற்றொரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறுகையில், இந்தியா, மும்பை தாக்குதலை இன்னும் மறக்கவில்லை. அதனால் அவர்கள் பழிவாங்க நினைக்கிறார்கள். பாகிஸ்தானும் இனிமேல் பதிலடி கொடுக்க தயாராக வேண்டும். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

முன்பெல்லாம், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும்போது பாகிஸ்தானை நாம் குற்றம்சாட்டுவோம். அதற்கான ஆதாரங்களையும் கொடுப்போம். ஆனால் பாகிஸ்தான், ஹாயாக எந்த நடவடிக்கையும் எடுக்காது. இப்போதெல்லாம் பாகிஸ்தான் கதறுகிறது. இந்தியாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமலும் குற்றம்சாட்டுகிறது. இதுதான், கர்மா என்று சொல்வார்கள், தீவிரவாதத்தை வளர்த்த நாடு, தீவிரவாதத்தால்தான் வீழும் என்கிறார்கள் நமது நெட்டிசன்கள்.

கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?
கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?

ஆக மொத்தம், பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சுமத்துவதும், இந்தியா அதை மறுப்பதும் எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சினைகளை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.

More From
Prev
Next
English summary
This article covers the recent accusations by Pakistan against India, alleging Indian involvement in terrorist activities, particularly the Jaffar Express attack. It details the statements from Pakistani and Indian foreign ministry spokespersons, Shafaqat Ali Khan and Randhir Jaiswal respectively. The article also includes perspectives from Pakistani commentators on the Balochistan issue and the alleged Indian role in supporting unrest. India has strongly refuted these claims, stating that Pakistan is the hub of global terrorism.
Read Entire Article