ARTICLE AD BOX
இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ரூ.7999 பட்ஜெட்ல 150 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. OTT.. எந்த மாடல்?
கடந்த மாதம் ரூ.9,999 விலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 (Portronics Beem 470) புரொஜெக்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புரொஜெக்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 ( Android 11) ஒஎஸ், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் வெளிவந்தது. இப்போது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது தற்போது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.7,999 விலையில் இந்த புதிய சாதனத்தை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 470 அம்சங்கள் (Portronics Beem 470 Specifications): நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி (OTT) ஆப்ஸ்களை போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடலில் 40 இன்ச் முதல் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection)செய்து கொள்ள முடியும். எனவே ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர். குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
அதேபோல் சுழலும் டிசைனில் (Rotatable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல். மேலும் 1080p ஃபுல் HD நேட்டிவ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
அதுவும் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டரில் 4500 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது சிறந்த பிக்சர் குவாலிட்டி வழங்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. எனவே பல்வேறு புதிய அம்சங்களை இதில் பயன்படுத்த முடியும்.
மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 புரொஜெக்டர் ஆனது 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது.எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone)
சப்போர்ட் உடன் இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.3, டூயல் பேண்ட் வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 470 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலில் உள்ளன. கேமிங், திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த புரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும்.
கருப்பு நிறத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடல் வாங்க கிடைக்கிறது. தற்போது சலுகை விலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 470 மாடல் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.