ARTICLE AD BOX
இதய நோயால் உயிருக்கு போராடும் 13 வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும்!
சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடி வருகிறார். சிறுவனை காப்பாற்ற தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு உதவியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெய்லாபூதின். கூலித்தொழிலாளி. இவருக்கு தினமும் வேலை என்பது இருக்காது. வேலை இருந்தாலும் ரூ.500 மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. இவரது மனைவி பெயர் பானு. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த தம்பதியின் 13 வயது மகன் பெயர் முகமது ஃபரீஸ். இவர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நன்றாக படித்து வருகிறார். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பை முடித்து நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறார் முகமது ஃபரீஸ். ஆனால் இப்போது அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சிறுவனின் இதய பிரச்சனையாகும். அதாவது சிறுவன் பிறக்கும்போதே இதயத்தில் 2 ஓட்டை இருந்தது. இதில் ஒரு ஓட்டை நாளடைவில் தானாகவே சரியானது ஆனால் இன்னொரு ஓட்டை என்பது இதயத்தில் உள்ளது. இதனால் முகமது ஃபரீஸ் தற்போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உயிரை காப்பாற்ற வேண்டுமானால் அறுவை சிகிச்சை என்பது தேவையானதாக ள்ளது.

முகமது ஃபரீஸ்-க்கு VSD Closure + Resection of RVOT + Aortic Valve Repair அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை, ஐசியூவில் தங்குவது மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் ரூ2.80 லட்சம் தேவையானதாக உள்ளது. ஆனால் தற்போது முகமது ஃபரீஸ் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார்.
முகமது ஃபரீஸ்க்கு உதவி செய்ய https://www.letscontribute.in/fundraiser/mohammed-farees