இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..

3 hours ago
ARTICLE AD BOX

Ration Card e-KYC Update: ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டை மூலம் நாம் அனைவரும் இலவசமாக அரிசி வாங்கி வருகிறோம். இந்த நிலையில், இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (e-KYC) பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளது. எனவே ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் e-KYC செய்து கொள்வது கட்டாயமாகும். இந்நிலையில், இது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. 

வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக மாதம் மாதம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 35 கிலோ அரிசியும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 5 முதல் அதிகபட்சம் 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த இரண்டு பிரிவு அட்டைதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் என அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை ரேஷன் கடைகளில் பதிவு செய்து (e-KYC) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த பணிகளை முடிக்க வரும் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்குள் பதிவு செய்யாவிட்டால் இலவச ரேஷன் அரிசி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 

மேலும் படிங்க: வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?

இருப்பினும் இன்னும் பலர் இதனை பதிவு செய்யலாம் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் மற்றும் ஆதார் அட்டையை கொடுத்து கைரேகை மற்றும் கருவிழி-யை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும். 

உயிரிழப்பு, வெளிநாடுகளுக்கு நிரந்தரமாக சென்றவர்கள் என பல காரணங்களால், ரேஷன் அட்டையில் சிலரது பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளதாம். இருப்பினும் இவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. 

இப்படி பெயர் நீக்கப்படாமலும், இன்னும் பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ளாமலும் இருப்பவர்களுக்கு மார்ச் மாததிற்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும், சொத்து வரம்பாக நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பு, கிராம புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம், நகர்புறங்களில் நான்கு சக்கர வாகனம் மற்றும் கிராமபுறங்களில் சொந்தமாக டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிங்க: TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article