ARTICLE AD BOX
இண்டியன்வெல்ஸ்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.
இதில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜாக் டிராப்பர் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 1-6, 6-0 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இறுதிப்போட்டியில் ஹோல்கர் ரூனே - அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Related Tags :