இணையத்தில் புயலை கிளப்பிய ‘சிஎஸ்கே’ ஜாம்பவான் தோனியின் ‘டீ சர்ட்’!

2 hours ago
ARTICLE AD BOX

ஒவ்வொரு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கும் முன்னதாக தோனி மிகவும் பேசப்படும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். பறக்கவிடும் சிக்ஸர்கள் மற்றும் அபாரமான பினிஷிங் திறன்களுக்கு பெயர் பெற்றவர் லெஜண்டரி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி.

மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் தான் ரசிகர்கள் ஏராளம். சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியை காண வரும் ரசிகர்களை விட தோனி விளையாடுவதை ரசிப்பதற்கு வரும் ரசிகர்கள் தான் அதிகம். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் 16.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், எக்ஸ் தளத்தில் 10.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னணியில் உள்ளது.

தன் மீது பெரிய அளவு பணத்தை செலவிட வேண்டாம் என்பதற்காக வெறும் ரூ.4 கோடி சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்ட தோனி, ராஞ்சியில் தனது தீவிர பயிற்சியை ஏற்கனவே தொடங்கி விட்டார். ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பந்துவீச்சு இயந்திரத்தை பயன்படுத்தி தனது பேட்டிங் திறமையை கூர்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தார். நுணுக்கமான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற தோனி, போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்ய எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை.

இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மார்ச் 23-ம்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
CSK அணிக்கு தோனி செய்த தியாகம்!
MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தனது அணி வீரர்களுடன் சென்னை வந்தார். அவரது வருகை ரசிகர்களை ஈர்த்ததை விட அவரது டி-சர்ட்டில் எழுதியிருந்த வாசகம் இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் "கடைசி முறை" என்று டீ சர்ட்டில் உள்ள டிசைன் ‘மோர்ஸ் கோட்’ எனும் நுட்பம் என்று கூறும் சிஎஸ்கே ரசிகர்களை, 'இந்த குறிப்பு, ஐபிஎல் 2025 தோனியின் பிரியாவிடை சீசனாக இருக்குமா, அதை தான் தோனி இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ' என்ற அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
“அப்போது என் மனது சுக்கு நூறாக உடைந்தது” – தோனி வருத்தம்!
MS Dhoni

அவருக்கு புகழ்பெற்ற அந்தஸ்து இருந்தபோதிலும், தோனி விளையாட்டில் மிகவும் அர்ப்பணிப்புள்ள வீரர்களில் ஒருவராக இருக்கிறார். 43 வயதான தோனியின் அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. ஆனால் அவரது புகழ்பெற்ற ஐபிஎல் வாழ்க்கை அதன் முடிவை நெருங்கும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகி வருகின்றன. சிஎஸ்கே கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.

"நான் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன், ஆனால், நிச்சயமாக அதற்காக நான் ஆறு முதல் எட்டு மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும், ஏனென்றால் ஐபிஎல் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்றாகும்" என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதில் அவர் பெருமை கொள்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி விளையாட்டின் மீதான தனது காதல் தான் என்னைத் தொடர வைக்கிறது என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
952 கேட்சுகளுக்கும், 46 ஸ்டம்பிங்குகளுக்கும் சொந்தக்காரர்... யார் இவர்? MS தோனி ?
MS Dhoni

ஐபிஎல் 2025 உண்மையில் தோனியின் கடைசியாக மாறினால், அது ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தோனி அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், குறிப்புகளை புறக்கணிப்பது ரசிகர்களுக்கு கடினமாக உள்ளது. ஆனால் ஒன்று நிச்சயம்... ஐபிஎல் 2025 கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சீசனாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Read Entire Article