ARTICLE AD BOX

Idli Kadai: தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கினார். இதில் ராயன் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. ஆனாலும் 3 படங்களை இயக்கி கோலிவுட்டில் ஒரு இயக்குனராக தன்னை நிலைநிறுத்திகொண்டார்.
ராயன் படத்தை இவர் உருவாக்கியிருந்த விதம் பலரிடமும் பாராட்டை பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்களே எதிர்பார்க்கும் வகையில் ராயன் படம் அமைந்திருந்தது. இப்போது ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இட்லி கடை படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் தனுஷோடு நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்தியராஜ், பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஏற்கனவே, கால்ஷீட் காரணமாக நித்யா மேனனால் படப்பிடிப்பு தடைபட்டது. படம் வேகமாக வளர்ந்த நிலையில் அதன்பின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

#image_title
தனுஷோ தெலுங்கு படமான குபேரா மற்றும் Tere Ishq Mein என்கிற ஹிந்தி படம் என நடிக்கப்போய்விட்டார். எனவே, இட்லி கடை என்னவானது என்றே தெரியவில்லை. இந்த நிலையில்தான் இட்லி கடை படத்தில் இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. நிறைய நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. எல்லோரிடமும் கால்ஷூட் வாங்கி விரைவில் படப்பிடிப்பை நடத்துவோம். இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என்று தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை பார்க்கும்போது ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாகது என்பது உறுதியாகிவிட்டது.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. இது தொடர்பான போஸ்டரும் வெளியானது. அருண் விஜய் குத்துச்சண்டை போடுவது போன்ற போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இட்லி கடை படத்தின் வில்லனே அருண் விஜய்தான் என்பதை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஷ்கரன் உறுதி செய்திருக்கிறார்.
’இட்லி கடை படத்தில் நடிக்கிறீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டபோது ‘நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என உங்களிடம் யார் சொன்னது?’ என கோபப்பட்டார் அருண் விஜய். இப்போது அவர்தான் படத்திற்கே வில்லன் என்பது தெரியவந்திருக்கிறது