ARTICLE AD BOX
இடதுசாரி சிந்தாந்தம் கொண்டவர்கள் குறித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய கருத்துக்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் நடந்த பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாட்டில் காணொளி வாயிலாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு பில் கிளிண்டன், டோனி பிளேர் உள்ளிட்டோர் இணைந்து சர்வதேச அளவில் ஒரு இடதுசாரி இணைப்பை உருவாக்கிய போது, அவர்களை ராஜதந்திரிகள் என அழைத்ததாகவும், ஆனால் தற்போது தாம் உள்பட ட்ரம்ப், மிலே, மோடி உள்ளிட்டோர் பேசும்போது அது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என விமர்சிக்கப்படுவதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளது இடதுசாரிகளை எரிச்சல் அடையச் செய்துள்ளதாக பேசிய மெலோனி, பழமைவாத தலைவர்கள் வெற்றி பெற்று சர்வதேச அளவில் ஒத்துழைத்து பணியாற்றி வருவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இடதுசாரி சிந்தனைக் கொண்டவர்களை விமர்சித்துள்ளார். இடதுசாரிகள் பழமைவாத தலைவர்கள் மீது வீசிய சேற்றை, மக்கள் வெற்றிகள் மூலமாக துடைத்து வருவதாகவும் மெலோனி தெரிவித்தார்.