இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

3 hours ago
ARTICLE AD BOX
INDvENG

கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

தற்பொழுது, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் தலைமை தாங்குகின்றனர். இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியி ஷமி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை.

இப்பொது, போட்டி தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியை கைப்பற்றும் நோக்கத்தில் இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஒப்பனராக களமிறங்கியுள்னனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் பந்து முதலாவதாக வீசி வருகிறார்.

இந்தியா அணி:

கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஹார்திக் பாண்ட்யா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Read Entire Article