ARTICLE AD BOX
லண்டன்: ஸ்டெனா இமாகுலேட் என்ற டேங்கர் கப்பல் ரசாயனம் மற்றும் எண்ணெய் பொருட்களுடன் கிரீஸ் நாட்டில் இருந்து வந்து கொண்டு இருந்தது. இந்த கப்பலும் சோலாங் என்ற சரக்கு கப்பலும் சென்று கொண்டு இருந்தது. இரு கப்பல்களும் லண்டனுக்கு வடக்கே சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள ஹல் கடற்கரை பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருகப்பல்களும் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து கிரிம்ஸ்பி ஈஸ்ட் துறைமுகத்தில் இருந்து சென்ற மீட்பு படையினர் 32 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பலர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
The post இங்கிலாந்தில் பரபரப்பு நடுக்கடலில் கப்பல்கள் மோதி தீப்பிடித்தது 32 பேர் மீட்பு appeared first on Dinakaran.