ARTICLE AD BOX
கடுமையான வெப்பமண்டல சூறாவளி ஆல்ஃபிரட், குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860 கிலோமீட்டர் தொலைவில் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டவுன்ஸ்வில்லே, மெக்கே, மக்காரி, ஹெர்வி விரிகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.