ARTICLE AD BOX
ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைபட்டுள்ளது. இந்தப் போட்டி குறைந்தபட்சம் 20 ஓவர்களாக நடத்தப்பட்டால் மட்டுமே அதன் முடிவு அங்கீகரிக்கப்படும். இந்த நிலையில், இன்று இரவு இந்திய நேரப்படி 7:02 மணிக்குள் இந்தப் போட்டி துவங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
7.02 மணிக்கு போட்டி துவங்கினால் அது 20 ஓவர் போட்டியாக இது நடத்தப்படும். அதற்கு மேலும் மழையால் தாமதம் ஏற்பட்டால், இந்தப் போட்டி ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் குரூப் பி பிரிவில் இடம் பெற்று உள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், அது குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு எந்த இரண்டு அணிகள் முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும்.
இந்தப் போட்டி ரத்து ஆனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கவும் அது முக்கிய காரணமாக இருக்கும்.
மழையால் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போட்டி ரத்தானால் என்ன ஆகும்.. அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
ஏனெனில், குரூப் பி பிரிவில் அடுத்து தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் 3 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது வேறு இரண்டு அணிகள் 4 புள்ளிகளை பெற வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி தங்களின் மீதமுள்ள மற்றொரு போட்டியில் தோல்வி அடைந்து, மற்றொரு அணி வெற்றி பெற்றால் அப்போது ஒரு அணி 5 புள்ளிகளுடனும், மற்றொரு அணி 3 புள்ளிகளுடனும் இருக்கும்.
எனவே, மழையால் இந்த இரு அணிகளில் ஒரு அணி வெளியேறவும் அதிக வாய்ப்பு உள்ளது.