ARTICLE AD BOX
கங்கனாவின் எமர்ஜென்சி படத்திற்கு ஆஸ்கார் வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வரும் நிலையில், அது தனக்கு வேண்டாம் என்று பதிவிட்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.
இந்திய முன்னணி நடிகரான கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தார். சமீபத்தில்கூட இவர் நடித்த சந்திரமுகி படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல ஸ்ட்ராங்கான கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்றவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஜான்சி ராணி போன்ற பல பயோபிக் படங்களில் நடித்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார்.
சினிமா துறையில் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கங்கனா.
இவர் நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த வரிசையில் அவர் இயக்கிய படம்தான் எமர்ஜென்ஸி. இப்படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவானது. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அந்த அளவிற்கு படம் ஓடவில்லை. இதனைத்தொடர்ந்து நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஒடிடியில் பார்த்த மக்கள், இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்துள்ள கங்கனா, "அமெரிக்கா தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை எப்படி மிரட்டி, ஒடுக்கி, வளைக்கிறார்கள் என்பதை எமர்ஜென்சி படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், அவர்களின் ஆஸ்கார் விருது அவர்களிடமே இருக்கட்டும். எங்களுக்கு தேசிய விருது உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.