ஆஸ்கர் வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

2 hours ago
ARTICLE AD BOX

ஆஸ்கர் வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

News
oi-Pandidurai Theethaiah
| Published: Thursday, February 27, 2025, 18:36 [IST]

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2 முறை ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி பெட்சி ஆகியோர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது வளர்ப்பு நாயும் இறந்துள்ளது. இந்த மரணத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர்களது மரணத்திற்கு ஹாலிவுட் திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. இருப்பினும் மரணம் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.

ஜெனே ஹேக்மேன் ஹாலிவுட் திரையுலகில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது நடிப்பு திறமையால் 2 ஆஸ்கர், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிட்டிஷ் அகாதெமி விருதுகளை வென்றுள்ளார். இவரது நடிப்பை பார்த்து வியந்து பாராட்டியவர்கள் ஏராளம். எனிமி ஆஃப் தி ஸ்டேட், தி குயிக் அண்ட் தி டெத், சூப்பர் மேன் படங்களில் நடித்தும் மிகவும் பிரபலம் அடைந்தார் ஜெனே ஹேக்மேன்.

Gene Hackman death Hollywood Oscar winner Actor

தியேட்டர் ஆர்டிஸ்ட்: தியேட்டரில் பல நாடகங்களை அரங்கேற்றிருந்தாலும் ஹாலிவுட்டில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த கனவை எட்டிப்பிடிக்க பல கதவுகளின் கோட்டைகளை உடைத்தெறிந்தார். கிடைத்த கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பன்முகத்திறமை கொண்ட அவர் நடிப்புதான் அவருக்கு உயிர் மூச்சாக இருந்தது. ஒரு காட்சியில் வந்தாலும் அது ஜெனே ஹேக்மேன் என்பவனை மக்கள் அறிய வேண்டும் என்ற திமிர் அவரிடம் இருந்தது.

Gene Hackman death Hollywood Oscar winner Actor

கெட்டவனுக்கு கெட்டவன்: எனிமி ஆஃப் தி ஸ்டேட் படத்தில் டிரம்ப் என்ற கதாப்பாத்திரத்தில் 5 வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பார். கெட்டவனுக்கெல்லாம் கெட்டவனாகவும், ஒருவனின் ஈகோவை தூண்டி விடும் நபராகவும், நல்லவனை கெட்டவனாக்க முயற்சிக்கும் அவரது கதாப்பாத்திரத்தை பார்த்தால் கோபத்தை ஏற்படுத்தும். உச்சபட்ச நட்சத்திரமாய் திகழ்ந்தாலும், இசை மீது அலாதி பிரியம் கொண்டவர் ஜெனே ஹேக்மேன்.

Gene Hackman death Hollywood Oscar winner Actor

மரணம்: 95 வயதான ஜெனே ஹேக்மேன் நேற்று மதியம் 1.45 மணிக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் அவரது வீட்டின் கதவை தட்டிய போது இருவரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. ஹேக்மேன் அவரது மனைவி பெட்சி அரகாவா மற்றும் அவர்களத வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார். பின்னர், சாண்டா பே கவுண்டி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவில்லை என தெரிவித்துள்ளது. ஜெனே ஹேக்மேன் இறந்த செய்தியறிந்த ரசிகர்கள் அவர் நடித்த படங்களை ஷேர் செய்து சமூகவலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Gene Hackman death Hollywood Oscar winner Actor

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: hollywood
English summary
2 Oscar-winning Hollywood actor Gene Hackman dies mysteriously, 2 ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜெனே ஹேக்மேன் மரணமடைந்தார்
Read Entire Article