ஆஸ்கர் மேடையில் இந்திய ரசிகர்களுக்காக தொகுப்பாளர் செய்த செயல்! குவியும் பாராட்டுக்கள்!

10 hours ago
ARTICLE AD BOX

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்று தான்  ஆஸ்கர். இந்த விருதை பெறுவது ஹாலிவுட் திரையுலகினருக்கு மட்டும் அல்ல, பல இந்திய பிரபலங்களுக்கும் மிகப்பெரிய கனவு எனலாம். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில், வெளிநாட்டு படங்கள் என்கிற பட்டியலில் கலந்து கொண்ட இந்திய படங்கள் அடுத்தடுத்து வெளியேறியது.

இந்நிலையில்  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது, இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் நிகழ்ச்சியை,  ஹாலிவுட் திரையுலகின் நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் தொகுத்து வழங்கினார். மிகவும் நேர்த்தியாக மட்டும் இன்றி நகைச்சுவையாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் ஆஸ்கர் மேடையில் பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் தான்,  அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. பொதுவாக, ஆஸ்கர் நிகழ்ச்சிகளை... ஹாலிவுட் பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருவதால், ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்கள். ஆனால்,  தொகுப்பாளர் கானன் ஓ பிரையன், இந்த வழக்கத்தை கொஞ்சம் மாற்றி பேசியுள்ளார்.

கானன் ஓ பிரையன், 'நமஸ்கார்' என ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தி... இந்தியர்கள் இந்த ஆஸ்கர் நிகழ்ச்சியை தங்களின் காலை உணவோடு கண்டு ரசிப்பார்கள் என கூறி, மேலும் சில ஹிந்தி வார்த்தைகளை ஆஸ்கர் மேடையில் பேசியுள்ளார். இது தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இவரின் வேடிக்கையான தொகுப்பு ஒருபக்கம் பார்வையாளர்களையும், பிரபலங்களையும் கவர்ந்தாலும் இவர் பேசிய இந்த ஓரிரு ஹிந்தி வார்த்தைகள் இந்தியர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Read Entire Article