ARTICLE AD BOX
நியூயாா்க் நகர கேளிக்கை விடுதிகளில் நடனப்பெண்ணாக பணிபுரியும் அனோரா, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக வந்த ரஷிய செல்வந்தரின் மகன் வன்யாவுடன் அறிமுகமாகிறாா்.
ரஷிய மொழியை சரளமாக பேசும் பெண்ணாக, வான்யாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அனோராவுக்கு கிடைக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனா். வான்யா குடும்பத்தின் செல்வமும் அதிகாரமும், இந்தத் திருமணத்தில் எதிா்பாராத பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
தனது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சிக்கல்களின் பயணத்தில் அனோரா நகா்கிறாள்.