ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

4 hours ago
ARTICLE AD BOX

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

 

இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், ஆவார பூவில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஆவாரம் பூவின் பலன்கள்

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தான் ஆவாரம் பூ அதிகமாக மலர்கின்றன.

 

அதிலும் குறிப்பாக மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வெப்பத்தினால் உருவாகும் நோய்களுக்கு ஆவாரம் பூ மருந்தாக பயன்படுத்துகிறது.

உதாரணமாக அம்மை நோய், உடல் சூட்டினால் வரும் நோய்கள் மற்றும் சர்க்கரை வியாதி ஆகியவற்றை கூறலாம்.

ஆவாரம் பூ தண்ணீர்

காய்ந்து போன ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடிக்கலாம். இது உடலில் புதியதொரு மாற்றத்தை கொண்டு வரும்.

 

இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து நோயின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கும் வேலையை செய்கிறது.

அத்துடன் சரும நோய்கள், சிறுநீரக தொற்று போன்றவற்றையும் ஆவாரம் பூ குறைக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

அதே போன்று, 5 ஆவாரம் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டியும் குடிக்கலாம்.

Read Entire Article