ஆளுநரின் தேநீர் விருந்து! நடிகர் விஜய் செல்வாரா?

1 day ago
ARTICLE AD BOX

நாளை நடைபெறும் குடியரசு நாள் கொண்டாட்டத்தை அடுத்து ஆளுநர் தேநீர் விருந்து விருந்து கொடுப்பது வழக்கமான நடைமுறையாகும். பொதுவாக மாநிலத்தின் முதலமைச்சர் தான் சிறப்பு விருந்தினராகவும், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற அழைப்பாளர்களாகவும் இருப்பது உண்டு.

ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மோதல் ஏற்படும் நிலையில் ஆளுங்கட்சியும் அதன் கூட்டணிக்கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதுவும் நடைமுறையில் உள்ள ஒன்றே ஆகும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த நாள் முதலாகவே ஆளும் திமுக அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முந்தைய தேநீர் விருந்தை புறக்கணித்தாலும் கடந்த ஆண்டு தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

இப்பவும் மோதல் போக்கே நீடித்தாலும், இந்த ஆண்டும் முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவு இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தவெக தலைவர் நடிகர் விஜய் க்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

பரந்தூர் பயணம் மூலம் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதியை முடிவுக்கு கொண்டு வந்தார். அடுத்தாக வேங்கைவயல் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது ஆளுநர் அழைப்பு விடுத்து இருப்பதால் இதையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார். முதலமைச்சரும் சென்றால்,  முதலமைச்சர் ஸ்டாலினும் விஜய்யும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகும்.

Read Entire Article