ARTICLE AD BOX
இம்பால்: மணிப்பூரில் ஆளுநரின் அறிவிப்பின் எதிரொலியாக 87 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்டீ மற்றும் குகி பிரிவினர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. வன்முறை பரவியதில் இரு தரப்பிலும் 250 பேர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும், அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த 13ம் தேதி முதல்வர் பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்தார். பிரேன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடமிருந்து கொள்யைடிக்கப்பட்ட ஆயுதங்களை 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூரின் ஆளுநர் ஏ.கே.பல்லா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்து துப்பாக்கிகள்,கையெறிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் மொத்தம் 87 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிகளவில் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
The post ஆளுநரின் அறிவிப்பு எதிரொலி: மணிப்பூரில் கொள்ளையடித்த 87 ஆயுதங்கள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.